Wednesday, January 9, 2019

பொதுப்பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு பத்து சதவிகித இட ஒதுக்கீடு

 அனைத்து பார்வையாளர்களுக்கும் white rose emperor சார்பாக முதல் வணக்கம். இட ஒதுக்கீடு என்பது சமுதாயத்தில் பின்தங்கிய மக்களுக்காக கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னேற்றம் காண மத்திய அரசும் ,மாநில அரசுகளும் இட ஒதுக்கீடு கொள்கைகளை கடைபிடித்து வருகிறது.
     நமது தமிழகத்தில் 69 சதவீத அளவுக்கு இட ஒதுக்கீடு கொள்கை கடைபிடிக்கப்படுகிறது. மத்திய அரசு 50 சதவீத இட ஒதுக்கீடும், 50% பொது பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு கொள்கை கடைபிடிக்கப்படுகிறது.
    நமது தமிழகம் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு இட ஒதுக்கீட்டில் பலதடவை சோதனைகளை சந்தித்து உள்ளது. இட ஒதுக்கீடு நிரந்தரமாக அட்டவணையில் சேர்த்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
     அதன்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு 18 சதவீத இட ஒதுக்கீடும், அதில் உள் ஒதுக்கீடாக 3% அருந்ததியினருக்கும், மழை ஜாதியினருக்கு ஒரு சதவீத ஒதுக்கீடும், மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீத ஒதுக்கீடும், பிற்பட்ட வகுப்பினருக்கு 30 சதவீத ஒதுக்கீட்டில் 3% முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடாக ஆக 69% ஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வருகிறது.
     மத்திய அரசு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் 50% மிகாமல் பட்டியல் ஜாதிகளுக்கு 15 சதவீதமும், பட்டியல் பழங்குடிகளுக்கு ஏழரை சதவீதமும் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. முன்னாள் படைவீரர்களுக்கு அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவன வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
     நேற்று மத்திய மந்திரிசபை பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
    அதன்படி பொதுப்பிரிவினரில் பின்தங்கிய ஏழைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு பெறுகின்றனர். ஆண்டுக்கு 8 லட்சத்துக்கு குறைவான வருமானம் மற்றும் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் பொதுப்பிரிவினர் இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை பெறுகின்றனர்.
      இந்தச் செய்தி ஆதரவையும் ,எதிர்ப்பையும் சந்தித்து வருகிறது.
       இந்த செய்தியினை நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
     அடுத்த செய்திகள் உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது white Rose Emperor தமிழ் ப்ளாக்.


   

     

No comments:

Post a Comment