ஒரு சின்ன காமெடி!
இரண்டு ஆடுங்க பேசிகிடுச்சு!
இன்னைக்கி மாடுகளை குளிப்பாட்டி மஞ்சள் தடவி பொட்டு வச்சு மாடுகளுக்கு பொங்க வச்சாங்க! அப்படியே நம்மளையும் சுத்தம் செய்து பொட்டு வைத்து பூ வைத்து அழகு பார்த்தார்கள்! ஒரு ஆடு இன்னொரு ஆடினை பார்த்து கேட்டுச்சு! நாளைக்கு நம்பளை என்ன செய்வாங்க? அந்த ஆடு சொல்லுச்சு நமக்கு கைமாதான்!
இதை காமெடியா எடுத்துக்குங்க!
சரி இப்ப விஷயத்துக்கு வருவோம்!
வாரத்துக்கு ஒரு தடவை பெண்களுக்கான சமையல் குறிப்பை பதிவு செய்வோம்! இன்றைக்கு சைவ பிரியர்களுக்காக கொள்ளு குழம்பு மற்றும் கொள்ளு துவையல் வைப்பது
பற்றி விரிவாக காண்போம்!
கொள்ளு குழம்பு வைக்கும் நாளினை ஒரு விடுமுறை நாளாக தேர்ந்தெடுப்போம். அப்பொழுதுதான் பெண்கள் பதட்டமில்லாமல் குழம்பு வைக்க சவுகரியமாக இருக்கும் .ஏனெனில் அலுவலகம் செல்லும் அவசரம், கடை திறக்க அவசரம் எல்லாம் அப்போது இல்லை. குழந்தைகளும் பள்ளி விடுமுறையில் வீட்டில் இருப்பார்கள் . சுவைத்து சாப்பிட நேரம் கிடைக்கும்!
கொள்ளு குழம்பு மற்றும் துவையல் வைக்க தேவையான பொருட்கள்:
கொள்ளு 200 கிராம் , தனியா தூள் 2 டேபிள்ஸ்பூன் வர மிளகாய் ஐந்து சீரகம் 3 ஸ்பூன் பெருங்காயத் தூள் ஒரு ஸ்பூன் பச்சை கருவேப்பிலை சிறிது நல்லெண்ணை அல்லது சன்பிளவர் ஆயில் உப்பு தேவையான அளவு புளி எலுமிச்சம் பழ அளவு மிளகு ஒரு ஸ்பூன் சின்னவெங்காயம் 2 கப் , பூண்டு-10 பல் அளவு இது கணவன் மனைவி இரு குழந்தைகளுக்கு ஆனது குடும்ப உறுப்பினர்கள் அதிகரிக்கும் பொழுது சிறிது அளவைக் கூட்டிக் கொள்ளவும்!
கொள்ளினை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து விடவும்!
மறுநாள் காலை ஊற வைத்துக் கொள்ளினை அரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்அரைத்து வைத்த கொள்ளினை குக்கர் அல்லது பாத்திரத்தில் நன்கு வேகவைக்கவும் நான்கு விசில் விட்டு வேக வைக்கவும் !நன்றாக வெந்து இருக்கும் அப்புறம் அந்த தண்ணீரை வடிக்காமல் தண்ணீரை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் ! கொள்ளு ஆறுவதற்குள் கீழ்க்கண்டவற்றை வறுத்துக்கொள்ளவும்!
அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் 3 மேஜைக் கரண்டி நல்லெண்ணெய் அல்லது சன்பிளவர் ஆயில் ஊற்றி எண்ணை காய்ந்ததும் சிறிய வெங்காயம் ஒன்றரை கப் பூண்டு-10 பல் பச்சை கருவேப்பிலை சிறிது சீரகம் 1 ஸ்பூன் மிளகு ஒரு ஸ்பூன் போட்டு பொன்னிறமாக வதங்கியதும். வர மிளகாய் 5 போட்டு கருகாமல் வறுக்க வேண்டும். பிறகு அடுப்பை நிறுத்த வேண்டும். பிறகு அதில் 2 டேபிள்ஸ்பூன் தனியாத்தூள் போட வேண்டும். அதில் பெருங்காயம் அரைஸ்பூன் சேர்க்கவும். பிறகு ஆற விட வேண்டும்.
ஆர வைத்த கொள்ளை மிக்ஸியில் போட்டு அரைக்கவேண்டும் அரைக்கும் பொழுது அரைஸ்பூன் உப்பு தூள் சேர்க்க வேண்டும் பின்பு ஆரிய வறுத்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து அரைக்க வேண்டும். அரைத்த விழுதினை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதில் சிறிது கொள்ளு துவையலுக்குஎடுத்து வைத்துக் கொள்ளவும் .எடுத்து வைத்த துவையலை நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்து சாப்பிடலாம்.
புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தை வைத்து மிதமான சூட்டில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்ற வேண்டும் அதில் 2cup வெங்காயத்தில அரைக்கப் வெங்காயத்தை நீளவாக்கில் கட் பண்ணி வைத்துக் கொள்ளவும் அதை எண்ணை காய்ந்ததும் சீரகம் ஒரு ஸ்பூன் வெங்காயம் அரை கப் கருவேப்பிலை சிறிது போட்டு தாளிக்கவும் வெங்காயம் பொன்னிறமானவுடன் அரைத்துவைத்துள்ள கொள்ளு விழுதினை போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். அதிகமாக தண்ணீர் சேர்க்கக் கூடாது
ரசம் மாதிரி ஆகிவிடக்கூடாது
குழம்பு பதத்திற்கு தண்ணீர் சேர்க்கவும் சேர்த்த பிறகு நன்றாக கலக்கி விடவும் கலக்கிவிட்டுக் கொண்டே இருக்கவும் பொங்கிவராமல் இருக்க கலக்கிக் கொண்டே இருக்கவும் ! கொள்ளுப் பருப்பின் பச்சை வாசனை போனவுடன் வடிகட்டி வைத்திருக்கும் புளிக்கரைசலை சேர்க்கவும் ! நன்றாக கொதி வந்தவுடன் குழம்பு பதத்திற்கு கெட்டியாக ஆகும் . அப்பொழுது சீரகத் தூள் ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள் ஸ்பூன் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைக்க வேண்டும்.
இப்பொழுது கொள்ளு குழம்பு ரெடி ஆகி வாசனை கம கமவென்று வீசும்!
கொள்ளு துவையலும் தனியாக எடுத்து வைத்ததை நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி சாப்பிடலாம்!
கொள்ளு துவையலை சாப்பிட்ட பிறகு சாப்பாட்டிற்கு கொள்ளு குழம்பு ஊற்றி சாப்பிடலாம்! கொள்ளுத் துவையல் ஒரு நேரத்திற்கு மட்டும் பயன்படுத்தி சாப்பிடவும்! கொள்ளு குழம்பு இரண்டு தடவை கூட சாப்பிடலாம்!
எப்பொழுதும் சாப்பிடும் சாப்பாட்டை விட நாமும் நம் குழந்தைகளும் கேட்டு வாங்கி சாப்பிடும்! ஃபாஸ்ட் புட் எதுக்காகும்!. பர்கர் எதுக்காகும்! அடுத்த விடுமுறை எப்ப வரும் என்று நினைப்பீர்கள் ! மம்மி அடுத்த தடவை எப்ப இந்த குழம்பை வைப்பீங்க அப்படின்னு குழந்தைங்க கேப்பாங்க!
நீங்களும் இதைச் செஞ்சு பார்த்துட்டு சாப்பிட்டுவிட்டு இது லைக் செய்து நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்க!
மறக்காம கமெண்ட் போடுங்க அது எங்களுக்கு வளர்ச்சிக்கு உதவும்!
கொள்ளு குழம்பு உடல் பருமனை குறைக்கும்! ரத்தம் சுத்தமாகும்!
நாளை மீண்டும் சந்திப்போம் !உங்கள் white rose emperor.
இதை செய்வது பற்றிய வீடியோவை விரைவில் யூட்யூபில் white rose trends தமிழ் சேனலில் அப்லோட் செய்ய உள்ளோம்.
கொள்ளு குழம்பு செய்வது எப்படி என்ற வீடியோ அப்லோடு செய்யப்பட்டு விட்டது கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்
No comments:
Post a Comment