Tuesday, January 22, 2019

சிறு செய்திகள், ஜோக்குகள் ,கவிதைகள்.

Kitchen Appliances



பார்வையாளர்கள் அனைவருக்கும் white rose Emperor சார்பாக முதல் வணக்கம்..
      இன்றைக்கு வித்தியாசமாக குட்டி செய்திகளை எழுத உள்ளேன்.
           ஜோக்குகள்:
முதல் நபர்: தியானம் பண்றது இப்போ
                        ஃபேஷனா போச்சு..
மற்றொருவர்: எப்படி?
கண்டக்டர்: டிக்கெட் எடுக்காத இவர் தூங்கிட்டு... கேட்டா... தியானம் பண்றேன் என்கிறார்..

ஒருவர்: டேய்... இப்ப எல்லாம் டவுன் பஸ்ஸில் போகாம பாஸ்ட் ட்ராக் டாக்சிலேயே போறியே..
ஆர்கே வாசி: எங்க ஊர் எலெக்ஷனில் இருந்து இப்படித்தான் போறேன்...

     புதுக்கவிதைகள்:
அந்த அம்மாவுக்குத்தான் வறுமை!
அரைகுறை ஆடை உடுத்தி இருக்கிறது..
நவீன இளம் பெண்ணே... வசதி இருந்தும்
நீயும் ஏன் அரைகுறை ஆடை...

       காபி:
காபி சுவைக்கிறது!
காபி கொட்டையை பறித்தவரின்
வாழ்க்கை கசக்கிறது!

         உழைப்பு:
ஏழையும் தான் உழைக்கிறான்
பணக்காரனும் தான் உழைக்கிறான்
ஆனால் அந்த ஏழையின் வியர்வையில்
உப்பு ஏன் சிறிது தூக்கலாக?

        வைத்தியம்:
ஆசனவாய் ரத்தக் கசிவு நீங்க...

மாசிக்காய்(நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்) வறுத்து பொடி செய்து அல்லது பொடியாக வாங்கி வெறும் வயிற்றில் காலை மாலை சாப்பிட ரத்த கசிவு நீங்கும்...
மலச்சிக்கல் உள்ளவர்கள் ஆசனவாயில் தடவிவர ரத்தக்கசிவு நீங்கும்...

பித்த வெடிப்புக்கு அரசமரத்தின் பால் எடுத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தடவி வர பித்த வெடிப்பு நீங்கும்....

எருக்கை இலை விளக்கெண்ணெய் சேர்த்து தீயிட்டு அதனை மூட்டு வலி உள்ள இடத்தில் பூசி வர மூட்டு வலி நீங்கும்....
சர்க்கரை நோய் கொப்புளங்கள் நீங்க..
சிறிய வெங்காயத்தை மஞ்சள் சேர்த்து கசக்கி சர்க்கரை நோய் கட்டிகள் மீது பூசிவர கொப்பளகட்டி நீங்கும்

நம் வீட்டுப் பக்கம் திருடன் வராமல் இருக்க சின்ன வைத்தியம்...


வீட்டில் நாய் வளர்க்கவும்....

just  jokes தாங்க...

மறுபடியும் புதிய விஷயங்களுடன் சந்திக்கும் வரை விடைபெறுவது white rose Emperor முத்துகிருஷ்ணன்.









No comments:

Post a Comment