Saturday, January 12, 2019

பிளாஸ்டிக் தேவையை குறைப்பது எப்படி?;!?


    பார்வையாளர்கள் அனைவருக்கும் white Rose emperor சார்பாக முதல் வணக்கம்.
        நமது வாழ்க்கையின் ஆறாவது விரலாக செல்போன் நுழைந்து விட்டது.
        அதைவிட முதல் கட்டைவிரல் ஆக பிளாஸ்டிக்  தேவைகள் வாழ்வில் இணைந்துவிட்டது!
        மனிதனின் ஒவ்வொரு உபயோகப்பிலும் பிளாஸ்டிக் நுழைந்துவிட்டது!
         பேனா முதல் குழந்தையின் பொம்மைகள், மாணவர்கள் அன்றாட தேவைகள், குடும்பத் தலைவிகளின் உபயோகங்கள், பேஸ்ட் ,பிரஷ்
சாப்பிடும் தட்டு ,அலுவலகம் செல்ல வாகனங்கள், அனைத்திலும் பிளாஸ்டிக் குறைந்துவிட்டது.
        நாம உபயோகித்த துணிப்பை போய் கேரி பேக் வந்தது. பித்தளை சில்வர் டம்ளர் போய் பிளாஸ்டிக் டம்ளர் வந்தது.
        திருமண விருந்தில் கூட சாப்பிட சாப்பிடும் மேஜை விரிப்புகள் ,தண்ணீர் டம்ளர் அனைத்திலும் பிளாஸ்டிக் நுழைந்துவிட்டது.
        இந்த உலகத்தை பிளாஸ்டிக் கழிவுகளை போட்டு ஒரு போர்வை போல மூட ஆரம்பித்துவிட்டோம்.
         இதனால் மழைநீர் கீழே இறங்காமல் வீணாக வழிந்தோடுகிறது!
          நீர் தங்காததால் நிலத்தடி மட்டம் குறைந்தது! தாவரங்கள் மரங்களுக்கு நீர் ஆதாரமின்றி பட்டுப்போக ஆரம்பித்துவிட்டன!
          உலகமெங்கும் சுற்றுச்சூழல் மாசு குறித்து பல நாடுகள் நடவடிக்கை எடுக்கத் தொடங்கிவிட்டன!
           நமது இந்தியாவில் தமிழகம் தான் முதன்முதலில் பல பிளாஸ்டிக் வகைகளை இந்த புத்தாண்டு முதல் தடை செய்துள்ளது!
            சரி தடை செய்தாகிவிட்டது! சட்டமும் போட்டாகிவிட்டது!!
             மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் தானே இந்த திட்டம் வெற்றி பெறும்? இல்லையென்றால் ஹெல்மெட் கதைதான்! சட்டம் போட்டு என்ன ?அபராதம் விதித்து என்ன? ஹெல்மெட் போடாததால் ஏற்பட்ட சாலை விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி என்ன பயன்?
               ஆண்களும் பெண்களும் ஹெல்மெட் அணியாமல் இரண்டு சக்கர வாகனம் ஓட்டுகின்றனர்!
              இதுமாதிரி ஆகக்கூடாது!
               நாமே சுய கட்டுப்பாடு மேற்கொள்ள வேண்டும்! முதலில் எந்த பொருள் வாங்கச் சென்றாலும் பாக்கெட்டில் பணம் மட்டும் எடுத்துச் சென்றால் போதாது! கையில் துணிப்பை எடுத்துச் செல்ல வேண்டும்!
           நமது ஒவ்வொரு வாகனத்திலும் துணிப்பைகள் வைத்திருக்க வேண்டும்! அதிலேயே கிடக்கட்டும்! தேவைக்கு உபயோகப்படும்!
          சரி நாம் திருந்தி விட்டால் போதுமா? கடைக்காரர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் அல்லவா?
          கடைக்காரர்கள் சில்லறை விற்பனைப் பொருட்களை காகித பை கொண்டு கட்டித்தர வேண்டும்!
      ‌‌‌‌‌‌   ஓட்டல் கடைக்காரர்கள் உணவுப்பொருட்கள் டிபன் வகைகளுக்கு பேக்கிங் செய்ய அலுமினிய பேப்பர் பயன்படுத்த வேண்டும்! சட்னி சாம்பார் வகைகளுக்கு அலுமினியக் கவர்கள் அல்லது 100 சதவீத composiable bio plasto bag உபயோகப்படுத்த வேண்டும் !
            அலுமினியக் கவர்களை விட BioPlasto bag உபயோகப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்!
          சிறிது கட்டணம் வசூலித்தாலும் தப்பில்லை! பணத்தை  விட இந்த நாடு பெரிது என்பது முக்கியம்!
           பயோ பிளாஸ்டிக் தயாரிப்புகள் மக்கி விடும் தன்மை கொண்டது!
    ‌‌‌‌‌‌‌‌‌       இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்க பழகுவோம்
           இந்த விஷயத்தை உங்க நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்!
           அடுத்த தகவலுடன் சந்திக்கும் வரை விடை பெறுவது உங்கள் white rose emperor.

No comments:

Post a Comment