Thursday, January 10, 2019

வங்கிகளுக்கு ஆதார் கட்டாயமில்லை! தகவல் உரிமைச் சட்டத்தில் வங்கி ஒப்புதல்!

அனைத்து பார்வையாளர்களுக்கும் white rose emperor சார்பாக முதல் வணக்கம். நாடு முழுவதும் உச்சநீதிமன்றம் பல பரபரப்பான தீர்ப்புகளை வழங்கி வருகிறது. அரசின் நலத்திட்ட உதவிகளுக்கு மட்டும் ஆதார் கட்டாயம் என்றும், வங்கி சேவைக்கு ஆதார் கட்டாயம் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
     ஆனாலும் வங்கிகள் புதிதாக வங்கிக்கணக்கு தொடங்கினாலும் கடன் மற்றும் இதர சேவைகளுக்கு ஆதார் எண் கேட்பது தொடர்கதையாக உள்ளது.
     ஏன் வங்கிகள் உச்சநீதிமன்ற தீர்ப்பினை மதிப்பதில்லை? கேட்டால் எங்களுக்கு ஆதார் எண் வேண்டாம் என்று instruction வரவில்லை ஆதார் எண் பதிவு செய்தால்தான் கம்ப்யூட்டரில் அடுத்தடுத்து பதிவுகளை பதிய முடியும் என வங்கி ஊழியர்கள் கூறுகின்றனர்.
     பொதுமக்களும் பணத் தேவைக்கு கடன் தேவைக்கும் மறுக்க முடியாமல் ஆதார் எண்ணினை வங்கிக்கு அளிக்கின்றனர் .
      வங்கி பாஸ்புக்கில் நமது வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் குறைந்தால் உடனடியாக நமது வங்கிக் கணக்கில் குறிப்பிட்ட தொகை பிடிக்கின்ற உத்தரவை உடனே அமுல் படுத்துகின்றனர். ரூபாய் 1000 ரூபாய் 500 செல்லாது என பிரதமர் டிவியில் உரையாற்றி அடுத்த நிமிடமே அந்த உத்தரவினை வங்கிகள் கடைப்பிடித்து ரூ 1000 ரூ 500 செல்லாது என கூறிவிட்டன.
       இந்த உத்தரவுகள் எல்லாம் வங்கி நிர்வாகத்திற்கு உடனடியாக கிடைக்கிறது. ஆனால் வங்கி சேவைக்கு ஆதார் எண் கட்டாயம் அல்ல என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு மட்டும் இன்னும் வந்து சேரவில்லையோ என பொது மக்கள் கேட்கின்றனர்.
        அதற்கும் தற்போது தகவல் உரிமைச் சட்டத்தில் பெற்ற தகவல் இங்கே தரப்படுகிறது.
        வங்கியின் மத்திய தகவல் ஆணையர் பாரத ஸ்டேட் வங்கி விழுப்புரம் அவர்கள் ஆதார் கட்டாயமில்லை என அனுப்பிய கடித நகல் கீழே தரப்பட்டுள்ளது.
         இதனை பொதுமக்கள் தங்கள் செல்போனில் டவுன்லோடு செய்து வைத்துக் கொள்ளவும்.
          வங்கிப் பணியாளர்களை நீங்கள் நாடும்போது வங்கி சேவைக்கு ஆதார் எண் கேட்டால் அதனை காட்டவும் அல்லது ஜெராக்ஸ் நகல் வழங்குங்கள்.
          அதற்கு மேலும் ஆதார் எண் வேண்டும் என கேட்டால் வங்கி மேலாளரை அல்லது உயர் அலுவலர்களை தொடர்பு கொள்ளுங்கள்.
           இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
           அடுத்த வீடியோவில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடைபெறுவதுwhite Rose emperor. நன்றி.
 


No comments:

Post a Comment