சீனாவில் அரசு பள்ளியில் முதுநிலை கணித ஆசிரியராக பணியாற்றி வரும் ஐசக் தேவகுமார் என்ற தமிழக இளைஞர் வெளிநாட்டு சிறந்த ஆசிரியருக்கான விருதை சீனாவில் இரண்டாவது முறையாக பெறுகிறார்!
இவர் ஈரோடு மாவட்டம் கிருஷ்ணாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்.
ஓய்வுபெற்ற ஆசிரியர் ஐசக்-சரோஜா தம்பதியரின் மகன் ஐசக் தேவகுமார் என்பவர் சீனாவில் அரசு பள்ளிக்கு 2015 ல் தேர்வாகி முதுநிலை கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் , 2016 மற்றும் இந்த வருடம் சீனாவில் பணிபுரியும் சிறந்த வெளிநாட்டு ஆசிரியருக்கான விருதினை பெற்றுள்ளார்.
இவர் தனது மாணவர்களுக்கு கணிதத்தை வேத கணிதம் முறையில் நடத்துவதாக கூறுகிறார். இது விரைவாக கணக்கினை விடை காண முடிவதால் சீன மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இவர் கூறும் வேத கணிதம் முறை என்றால் என்ன?
இந்த வேத கணிதம் இருபதாம் நூற்றாண்டில் ஸ்ரீ பாரதி கிருஷ்ண தீர்த்த சுவாமிகள் என்ற இந்து சமய , கணிதவியலாளர் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
இவர் வேதங்களிலிருந்து உருவாக்கியதாக கூறினாலும் அது எதுவும் வேதங்களில் இல்லை என கூறப்படுகிறது.
இந்த வேத கணிதம் 16 முதன்மை வாய்ப்பாடுகள் , 13 துணை வாய்ப்பாடுகள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
இவர் உருவாக்கிய இக்கணிதம் மூலம் கூட்டல், கழித்தல் ,பெருக்கல் ,வகுத்தல் ,வர்க்க மூலம் , இருபடி சமன்பாடு, பிதாகரஸ் உள்ளிட்ட மேலும் பல கணக்குகளை மிகக் குறைந்த நேரத்தில் விடை காண முடியும்!
இவர் தனது 16 வயதில் 1899 ஆம் ஆண்டிலேயே" சரஸ்வதி " எனும் பட்டம் பெற்றார்.
இவரது கணக்குகளில் சில:
உதாரணம்: வர்க்க எண்கள்:
எண்களுக்கான வர்க்கத்தை எந்த அளவுக்கு குறைக்கவும் குறைபாட்டின் வர்க்கத்தை காணலாம்!
(உ.ம்): (98)2
98 ன் அடிப்படை என் (Basic Number) நூறு ஆகும்.
எனவே, 100-98=2
= 98-2 /. 2x2
= 96 / 04. 2x2= 04 when basis 100
=9604 ஆகும்.
அடிப்படை எண் 100 இல் இருந்து 98 க்கு இடையே வித்தியாசம் 02 ஆகும்.
கொடுக்கப்பட்ட எண்ணில் இருந்து 02 ஐ கழிக்க முதல் பாதி விடை கிடைக்கும் (98-02=96) ஆகும்.
பின் 2ன் வர்க்கத்தை கண்டுபிடிக்க இரண்டாவது பாதி விடை கிடைக்கும் (2x2=04)
பெருக்கல்:
உதாரணம் 92x94
92,94க்கான அடிப்படை எண்100 ஆகும்.
92-08(92-100=08)
92-06. / (94-100= 06)
92-06. / 48 .(08x06)
அல்லது
94-08
= 86 / 48
8648
கொடுக்கப்பட்ட எண்களுக்கான அடிப்படை என்னை கண்டுபிடித்து அந்த எண்ணிற்கும் பெருக்க வேண்டிய எண்ணிற்கும் உள்ள வித்தியாசத்தை எழுதவும். வித்தியாசம் குறை அல்லது எண்ணாக இருக்கலாம்!
92,94ன் அடிப்படை எண் 100 ஆகும்.
எனவே92-100=08 மற்றும்94-100=06
இரண்டு எண்ணிற்க்கான வித்தியாசத்தை பெருக்கவும்!
கிடைப்பது இரண்டாவது பாதி விடை
=08x06=48
10digit எண்களைக் கூட கழித்திட முடியும்!
உதாரணம்:
8765439812- 7987768189
முதலில் கழிக்கவேண்டிய எண்ணில் உள்ள7987768189 கடைசி இலக்கத்தை தவிர மற்ற அனைத்து இலக்கங்களையும் (இடமிருந்து வலமாக) 9 ஆல் கழித்து, கடைசி இலக்கத்தை மட்டும் 10 ஆல் கழிக்க வேண்டும்.
2012231811 ஆகும்.
கிடைத்த எண்ணினை கழிபடும் எண்ணுடன் கூட்ட வேண்டும்.
10777671623 கிடைக்கும்.
கூட்டி வரும் விடையின் இடதுபக்க கடைசி இலக்கத்தை மட்டும் நீக்க விடை கிடைக்கும்.
777671623 ஆகும்.
இந்தக் கணக்கு முறைகள் மிக விரைவாக எளிதாக தீர்வு கிடைக்கிறது.
இந்த விஷயம் உங்களுக்கு பிடிச்சிருக்கும்! இதனை ஷேர் செய்து கமெண்ட் செய்யுங்கள்!
அடுத்தviews சந்திக்கும் வரை விடைபெறுவது உங்கள் white rose Emperor முத்துகிருஷ்ணன்.
To shop Maths books in Amazon click below:
No comments:
Post a Comment