பார்வையாளர்கள் அனைவருக்கும் white rose Emperor சார்பாக முதல் வணக்கம்.....
இன்றைக்கும் ஒரு வித்தியாசத்தை பண்ணலாம் என்று இருக்கிறேன்....
ஒரு கற்பனைக் கதை எழுதியுள்ளேன்...
டில்லி 5 ஸ்டார் ஹோட்டல்..
ரூம் முழுவதும் ஸ்ப்ரே வாசனை..
பாபிலோனியா தொங்கும் தோட்டம் போல மலர் செடிகள்... வெளியில் ஜோடனை... பளபளப்பானLED பெரிய சைஸ் டிவியில் மைக்கேல் ஜாக்சன் மெல்லிய ஒளியில் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தார்...
குளியலறையில் இருந்து பிரஷ்ஷாக குளித்துவிட்டு வெள்ளை டவலில் தலையை துவட்டிக் கொண் டிவி எதிர் சோபாவில் அமர்ந்தார் மிகப்பெரிய கார்ப்பரேட் கம்பெனி ஒன்றின் பிராந்திய மேனேஜர் துக்காராம்.
2004ஆம் ஆண்டு வாக்கில் எம் பி ஏ முடித்த கையோடு பிராஞ்ச் மேனேஜர் ஆக சேர்ந்து 15 வருடத்தில் zonal manager துக்காராம் தனது செல்போனை எடுத்து ..
ஹலோ... டார்லிங்...
.......
.......
ஹலோ டார்லிங்...
ஹாய் துக்கி! .... கரீனா ஸ்பீக்கிங்...
ஹாய் டார்லிங்...
ஜீன்ஸ் பேண்ட்டையும் டாப்ஸ்யும் சரி செய்து கொண்டே... Duroflex மெத்தையில் கவிழ்ந்து படுத்தபடியே kareena. ஒரிஜினல் கரீனா கபூர் புகழ்ந்து விளம்பரப்படுத்திய வாசனை மனைவி கணினியில் வீசுவதை செல்போனிலேயே வாசனையை முகர்ந்தார் துக்காராம்...
என்ன டிபன் சாப்பிட்டாச்சா டார்லிங்...
இன்னும் ஆகலை ......ரெடியாகிட்டு இருக்கு...
...........
ஆயா! டிபன் ரெடி ஆயிடுச்சா என வேலைக்காரியை கேட்டபடியே kareena போனில் பேசினாரள்...
டார்லிங் டெல்லி மீட்டிங்கில் கல்கத்தா zonal மேனேஜர் உள்பட 15 பேர் கலந்துக்கிட்டாங்க... மீட்டிங்கில் எனது performance ரொம்ப top என்று எம் டி ஏ பாராட்டினார்...
மீட்டிங் முடிந்து பப்பே மீல்ஸ் டார்லிங்...
சிக்கன் 65 சிக்கன் தந்தூரி மட்டன் பிரியாணி ஐஸ்கிரீம் குலோப் ஜாமுன் சாப்பிட்டேன்.... சூப்பர் டார்லிங்....
அப்புறம் kareena... டெல்லி கேர்ள்ஸ் மத்தியில் தோளில் கை போட்டபடியே டான்ஸ் ஆடினேன்...
ஹாய்....சீ....
ஹேய் டார்லிங் சும்மா உடான்ஸ்...
பின்னே எனக்கு தெரியாதா என் கணவர் பற்றி...
எங்கே நம்ப பப்பி...
எட்டு மணிக்கு படுத்து தூங்கிட்டாள்....
சரி டார்லிங் சாப்பிட்டு படுத்து தூங்கு....
காலையில் பேசுறேன்... குட் நைட்... டார்லிங் ஒரு....
இந்தாங்க..... ஒரு"பச்"முத்தம் காதில் கேட்டது துக்காராமுக்கு.
கரீனா டாப்ஸ்,ஜுன்ஸ்ஸிலிருந்து நைட்டிக்கு மாறி தூங்கச் சென்றாலள்.
.....
அன்று இரவு ஒன்பது பத்து மணிக்கு...
கிராமத்து தோட்ட கொல்லைப்புறம்... ஒரு எருமை மாடு கோமியம் விடுவதை தள்ளிக்கொண்டு பசுமாட்டுக்கு தட்டை தவிட்டை வைத்து விட்டு வீட்டுக்குள் நுழைய சென்றாள் மல்லிகா...
யாரோ வருவது போல் தெரியவே சொருகியிருந்த பாவாடையை இறக்கி விட்ட படியே வீட்டுக்குள் நுழைந்தாள்... குடுமையை சரி செய்தபடியே .....அந்த மல்லிகா.
மல்லிகா யாரும் இல்லை..... துக்காராம் கற்பனை செய்து கனவு காணும் kareena தான்....
துக்காராம் வேறு
யாரும் இல்ல ...
மல்லிகா புருஷன் பழனியப்பன் தான்..
கற்பனையிலும் ஒரு சுகம் இருக்கு இல்ல....
Amazon purchase given below:click
No comments:
Post a Comment