அனைவருக்கும் வணக்கம்.
மார்கழி மாதம் அமாவாசை தினத்தன்று அனுமன் அவதரித்த நாளினை அனுமன் ஜெயந்தியாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
எனவே, உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் ஆஞ்சநேயருக்கு கடந்த மார்கழி மாதம் அமாவாசை அன்று ஒரு லட்சத்து 8 வடைமாலை சாத்தப்பட்டது.
இந்த ஆஞ்சநேயர் 18 அடி உயரம் கொண்டவர். இவருக்கு வடை மாலையை தொடர்ந்து, துளசி மாலை, வெண்ணெய் அபிஷேகம் பால் அபிஷேகம் செய்யப்பட்டு அன்று மாலை முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டதை நாம் அறிவோம்.
நாமக்கல் குடைவரை நரசிம்மர் கோவில் கடையெழு வள்ளல்கள் ஒருவரான அதியமான் நல்லி பரம்பரையில் வந்த குணசீலன் என்பவரால் கட்டப்பட்டது.
இந்த ஆஞ்சநேயரும் அந்த சமகாலத்திலேயே சார்ந்தது எனக் கூறப்படுகிறது.
இந்த ஆஞ்சநேயர் கோவிலில் தான் ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அர்ச்சகர் வெங்கடேஷ் என்பவர் 8 அடி உயரத்தில் இருந்து ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடத்திக் கொண்டிருக்கும் போது தவறி வழுக்கி 8 அடி உயரத்தில் இருந்து தலைகீழாக விழுந்தார்.
இவர் சம்பளப் பட்டியலில் இடம்பெறாத அர்ச்சகர் ஆவார்.
இவர் தனது உறவினரான அர்ச்சகருக்கு உதவி அர்ச்சகராக விடுமுறை காலங்களில் கோவிலில் பணி புரிபவர்.
இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளர் பணி புரிந்து கொண்டே விடுமுறை நாட்களில் ஆஞ்சநேயர் கோவிலில் பணி செய்ய உதவியாக வருபவர்.
இவர்தான் நேற்று 18 அடி ஆஞ்சநேயருக்கு மலர்மாலை சாத்த 8 அடி உயர மேடையிலிருந்து பணிபுரிந்து கொண்டிருந்தார்.
!
தொடந்து மாலைகள் சாதி கொண்டிருக்கும் போது ஏனோ பேலன்ஸ் செய்யும்போது மேடையில் இருந்த வெண்ணை போன்ற வழவழப்பான பொருள் வழுக்கி 8 அடி உயரத்திலிருந்து வழுக்கி தலைகீழாக விழுந்தார்.
!
இதில் இவர் படுகாயமடைந்து விட்டதால் சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பின்னர் அவர் சிகிச்சை பலனளிக்காமல் மரணம் அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து ஆஞ்சநேயர் கோவிலுக்கு பரிகார பூஜை செய்யப்பட்டது.
ஆஞ்சநேயருக்காக பணிவிடை செய்த அர்ச்சகர் அந்த ஆஞ்சநேயர் காலடியிலேயே மரணத்தை தழுவியது பக்தர்களுக்கு மிக்க கவலையை ஏற்படுத்தி விட்டது.
இந்தச் செய்தியை உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
எங்களது white rose trends Tamil channel யினை யூட்யூபில் தொடர்ந்து கண்டுகளியுங்கள்.
அடுத்த தகவல்களுடன் சந்திக்கும் வரை விடைபெறுவது white rose Emperor
முத்துகிருஷ்ணன்.
Amazon children toys in very low cost
Click below
குழந்தைகளின் பொம்மைகள் வாங்க Amazon கீழே click செய்யவும் 👇👍
No comments:
Post a Comment