Monday, January 14, 2019

தைத்திருநாள் பொங்கல்

       தை 1 பிறக்கப் போகிறது!
     ‌ தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது சான்றோர் வாக்கு!
       கடனும் உடனும் பட்டு வறட்சியைத் தாங்கி புயலை தாங்கி மிச்ச மீதி விளைந்ததை நமது உழவர்கள் அறுவடை செய்ததை கொண்டாடும் திருநாள்!
      விளைச்சலை தேவைக்கு வைத்து கொண்டு மீதியை விற்று கடனை அடைப்பார்கள்! மிச்ச மீதியை பெற்ற குழந்தைகளுக்கு நகை நட்டு வாங்கி வைப்பார்கள்!
      அதனாலதான் தைபிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்லி இருக்காங்க!
       இன்று இரவே பெண்கள் வீட்டு முன்பு சாணி மொழுகி மிகப் பெரிய கோலம் போடுவார்கள்! கோலத்துககு கலர் கட்டுவார்கள்!
      அவர்களைச் சுற்றி சிறார்கள் தலையில் ஸ்கார்ப் கட்டிக்கொண்டு சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பார்கள்! பக்கத்து வீட்டுப் பெண்கள் எல்லாம் கலந்துபேசி கலந்துகட்டி கோலம் போடுவார்கள்!
       அதற்குள் இரவு பனிரண்டு தாண்டிவிடும்! தூங்க படுப்பார்கள்! 4 மணிக்கு கோழி எழுப்பி விடும்! உடனே எழுந்து குளிச்சு தயாராவார்கள்!
      அவர்கள் தங்கள் குழந்தைகளை எழுப்பி எழுந்திருக்கச் சொல்வார்கள் !குழந்தைகள் தூங்கி வழியும்? சில மணித்துளிகளில் ஐந்து மணி ஆகிவிடும். அவர்கள், அவர்களைழுப்பி குளிக்க வைத்து விடுவதற்குள் காலை 6 மணி ஆகிவிடும்!
       விட்டு பின்பு வராந்தாவில் சாணம் மெழுகி வைத்திருப்பார்கள்! மூன்று கல்லினை சமமாக தேடி எடுத்து  விறகுசுள்ளிகளை  தேடி எடுப்பார்கள்!
    (கிராமத்தில்தான் !நகரில் ஏது இடம் ?எல்லாம் குக்கர் தான் !கேஸ் அடுப்பு தான்)
      மண்பானையில் பச்சரிசி பாசிப்பருப்பு தேவைக்கு இட்டு கொதிக்க விடுவார்கள்! அச்சு வெல்லம் உருண்டை வெல்லம் இட்டு கொதிக்க விடுவார்கள்  ! சிறிது பாலும் இடுவார்கள்! சரியான பதத்தில் நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை நெய் விடுவார்கள்!
      பொங்கல் பொங்க ஆரம்பித்துவிடும்! பொங்கல் வழி ஆரம்பித்ததும் "பொங்கலோ பொங்கல்" என குலவி இடுவார்கள் !
       பானையில் மஞ்சள் கொம்பு சுற்றி திருநீறு இட்டு கரும்பு வைத்துப் படைப்பார்கள்! சூரிய வழிபாடு நடைபெறும்!
        இது தமிழரின் நீண்ட அடையாளம்!
         இந்த பொங்கலை நாளை நல்ல நேரமான காலை பத்து முப்பது முதல்
11 .30க்குள் இட வேண்டும்!
      நமது முன்னோர்கள் இயற்கை வழிபாட்டு முறைகளை வணங்கினார்கள்! அதனால்தான் சூரிய வழிபாட்டுடன் பொங்கல் வைக்கிறார்கள்!
       தமிழரின் சிந்து சமவெளி ஆய்வுகளில் சூரியன் பசுபதி கடவுளை வழிபட் டது தெரிய
வருகிறது கீழடி ஆய்வுகளும் நிரூபிக்கிறது!
        அதனால்தான் சூரியனுக்கு முதல் படையில் செய்யப்படுகிறது!
         தை ஒன்று  ஐயப்பன் சன்னதியில் மகர ஜோதி காட்டப்படுகிறது. வள்ளலாரும் ஜோதி தரிசனம் காட்டினார்!
        எனவேதான் தை ஒன்று நமது வாழ்வின் திருநாள்! நாம் வெளிநாட்டில் இருந்தாலும் பொங்கல் வைத்து நமது கலாச்சாரத்தை காப்பாற்றுவோம்!
       தீபாவளி போல நமது தை திருநாளும் அமெரிக்க வெள்ளை மாளிகையில் கொண்டாடும் நாள் விரைவில் வரும்!
         பொங்கலோ பொங்கல்!!
 
     

     








No comments:

Post a Comment