Monday, January 21, 2019

ஒட்டக பந்தயத்தில் ஜாக்கி ரோபோக்கள்




பார்வையாளர்கள் அனைவருக்கும் white rose Emperor சார்பாக முதல் வணக்கம்!
       பந்தயங்கள் உலகம் முழுவதும் பல வகைகளாக நடத்தப்படுகின்றன!
        வட இந்தியாவில் காளை பந்தயங்களும், குதிரைப் பந்தயங்கள் நடத்தப்படுகின்றன. தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ரேக்ளா ரேஸ் பந்தயம் பிரபலமானது . அதன்படி சின்ன வண்டி தயார் செய்து , இரட்டை சின்ன வண்டி பூட்டி , விழா காலங்களில் ரேக்ளா ரேஸ் பந்தயம் நடைபெறும் . இது தமிழரின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்று .
        வெளிநாடுகளில் குதிரை பந்தயம் , எருது பந்தயம் , ஏன் மனைவியை தூக்கி முதுகில் வைத்துக் கொண்டு ஓடும் பந்தயமும் உண்டு.
          ஜப்பானில் ரோபோக்கள் பந்தயமும் உண்டு.


       வளைகுடா நாடுகளில் காலங்காலமாக ஓட்டக பந்தயம் நடைபெற்று வருகிறது! சவுதி அரேபியா ,அமீரகம், பக்ரைன், கத்தார் முதலிய நாடுகளில் ஒட்டகப் பந்தயம் பிரபலமானது!
         வளைகுடா நாடுகளில் அடிமை சிறுவர்களை ஒட்டகம் முதுகில் கட்டி ஓட்டகப் பந்தய ஜாக்கி களாக அமர்த்தி ஒட்டக பந்தயத்தை ஆரம்பத்தில் நடத்தினார்கள்.
        சிறுவர்கள் பயத்தால் கத்த, அந்த சத்தம் ஒட்டகம் வேகமாக ஓட,, பார்த்து ரசித்தனர்!
        உலக எதிர்ப்பின் காரணமாக இந்த முறை ஒழிந்தது!
       எனவே யாரை ஜாக்கிகள் ஆக பயன்படுத்துவது என சிந்தித்து ,  ரோபோக்களை ஓட்டப்பந்தயத்தில் இறங்கிவிட்டார்கள்!
         உலகம் முழுவதும் ரோபோக்கள் பல மாடல்களில் உருவாக்கப்பட்டன. மனித உருவ ரோபோக்கள் அசிமோ எனும் ரோபோ ஹோண்டா கம்பெனியால் உருவாக்கப்பட்டது.
        பந்து விளையாடும் ரோபோ, வீட்டு வேலை செய்ய ரோபோ ,ஆபத்து காலங்களில் நெருப்பில் இறங்கி வேலை செய்யும் ரோபோ, பெண் வடிவ ரோபோக்கள் உருவாக்கப்பட்டன.
         பேசும் ரோபோக்கள் பாடும் ரோபோக்கள் உருவாக்கப்பட்டன.
         தற்போது அமீரகத்தில் ரோபோ ஜாக்கிகள் ஓட்டப் பந்தயங்களில் பயன்படுத்தப்படுகிறது.
         சிறுவர்களுக்கு பதிலாக சிறுவர்களைப் போல கண்ணாடி அணிந்து,  உடை உடுத்தி, செண்ட் அடித்து ஒட்டக முதுகில் கட்டி ரோபோக்களை ஜாக்கி அமர்த்தி விடுகிறார்கள்.
        கேடீம் என்ற சுவிட்சர்லாந்து கம்பெனி முதலில் ரோபோ ஜாக்கிகளை உருவாக்கினார்கள். இதனை அமீரகம் சில மாறுதல்களுடன் குட்டி ரோபோ தயாரித்து ஓட்டப் பந்தயங்களில் பயன்படுத்துகிறது.
         இந்த  ரோபோக்களை சிறிது தூரத்தில் இருந்து ரிமோட் மூலம் இயக்கப்படுகிறது. இது கட்டளைக்கு ஏற்ப சிறுவர்களைப் போல அலறியும்... பயத்தால் கத்துவது போலவும்.... சாட்டைகளை மெதுவாகசுழற்றியடிக்கும்
          கட்டளைக்கு ஏற்று வேகமாக சாட்டையை சுழற்றி அடுத்து ஒட்டகத்தை விரட்டும்.
         ஓட்டப்பந்தய வீரர்களின் இதயத்துடிப்பை அளப்பதுபோல் , பந்தய ஒட்டகங்களுக்கும் பந்தயத்தின் போது ரோபோ மூலம் இதயத்துடிப்பு கண்காணிக்கப்படுகிறது.
          இதனால் ஒட்டக உயிரிழப்பை தடுக்க முடிகிறது!
           கரண்ட் ஷாக் கொடுக்கும் பந்தயங்கள் நடத்தப்படுகிறது . எதிர்ப்பாளர்கள் எதிர்த்தாலும் , இந்த ஒட்டகப் பந்தயம் வளைகுடா நாடுகளில் நடந்து வருகிறது.
           இந்த விஷயம் உங்களுக்கு பிடித்திருக்கும்! இதனை நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்க!
           எங்கள் white rose Trends channel youtube ல பாருங்கள்...
           அடுத்த தகவலுடன் சந்திக்கும் வரை விடை பெறுவது white rose Emperor முத்துகிருஷ்ணன்.



     
     







No comments:

Post a Comment