Tuesday, January 8, 2019

ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் போட்டியில் 71 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா சாதனை

 பார்வையாளர்கள் அனைவருக்கும் white rose emperor தமிழ்  பிளாக்கின் முதல் வணக்கம். ஒரு காலத்தில், கிரிக்கெட் சகாப்தத்தில் உலகிலேயே வெல்ல முடியாத அணியாக ஆஸ்திரேலியா இருந்து வந்துள்ளது. அந்த ஆஸ்திரேலியாவை அதன் மண்ணிலேயே கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் 71 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது.
         இந்தியா-ஆஸ்திரேலியா இடையில் ச் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்றது.
           முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
            பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி நாலாவது நாளில்104.5 ஓவர்களில் 300 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி follow on ஆனது.
             follow on ஆனதால் 322 run பின்தங்கி ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. மழை பெய்ததால் 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நாலாவது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.
              நாலாவது நாளில் வெறும் 25.2 ஓவர்கள் மட்டுமே பந்து வீசப்பட்டது.
              நேற்றைய ஐந்தாவது மற்றும் கடைசிநாள் ஆட்டமும் மழையால், நடுவர்கள் ஆட்டத்தை கைவிட்டனர். இதனால் போட்டி டிராவில் முடிந்தது.
              இந்திய வீரர் புஜாரா ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது பெற்றார்.
               முதலாவது டெஸ்டில் 31 ரன் வித்தியாசத்திலும், மூன்றாவது டெஸ்டில் 137 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்டில் 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது. டெஸ்ட் போட்டி தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் இந்தியா வென்றது.
              1947இல் ஆஸ்திரேலியாவில் கால் வைத்த இந்திய அணி 71ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரை வென்றும், ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற பெருமை பெற்றது.
         ‌‌‌‌‌‌    தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றி என்ற கனவு இன்னும் பாக்கி உள்ளது. அதுவும் விரைவில் கனவு நனவாகும் நாள் வெகு தொலைவில் இல்லை.
           12 மாத கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
          வெற்றி பெற்ற இந்திய அணிக்கு இந்திய பிரதமர் மோடி அவர்கள், ஜனாதிபதி , துணை ஜனாதிபதி டெண்டுல்கர் உள்பட வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளனர்.
           இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கும். இதனை உங்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும். அடுத்த தகவலுடன் நாளை உங்களை சந்திக்கிறேன். உங்கள் white Rose
emperor. நன்றி வணக்கம்.
       
             

       

No comments:

Post a Comment