பார்வையாளர்கள் அனைவருக்கும் white rose Emperor சார்பாக முதல் வணக்கம்!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் முன்னின்று 2000 காளைகளுடன் ஜல்லிக்கட்டு இன்று தொடங்கியது. அதில் முதல் அமைச்சர் உள்பட பெரும்பான்மையான அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
இதில் கின்னஸ் சாதனை படக்குழுவினர் Mr Mark மற்றும் Mrs Nalini விராலிமலைக்கு வருகை தந்து கின்னஸ் சாதனையை பதிவு செய்து கொண்டனர்.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கண்டுகளித்தனர்!
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி பாதுகாப்புடன் நடைபெற்றது
வீரர்களைக் கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டு துவக்கப்பட்டது.
முதலமைச்சர் ஜல்லிக்கட்டு பச்சைக்கொடி காட்டி துவக்கி வைத்தார். முதலமைச்சர் ஆரம்பத்திலேயே கலந்துகொண்டு உட்கார்ந்து கைதட்டி ரசித்தார்!
முதல் மாடாக கோயில் மாடு கலந்து கொண்டதை யாரும் பிடிக்காமல் அனுப்பி வைக்கப்பட்டது. அடுத்த மாட்டை பனிரெண்டாம் எண் வீரர் அடக்கினார் .அவருக்கு முதல்வர் கையால் பரிசு வழங்கப்பட்டது.
இதன் வர்ணனையை அங்கு இருந்த வர்ணனையாளர்கள் பாணியிலேயே விளக்குகிறேன்!
அருமை !அருமை!! அமைச்சர் விஜயபாஸ்கர் மாடு ! செவல கருப்பன் மாடு நெருங்க முடியல !அலங்காநல்லூரிலும் இதனை நெருங்க முடியல!
மணப்பாறை மணி கவுண்டர் மாடு !அருமையான மாடு வெற்றி பெற்றது!
சூப்பர் வாழ்த்துக்கள்!
முதலமைச்சர் வழங்கும் சைக்கிள்! அங்கு அள்ளி போடுப்பா ! ...அட அட..
19க்கு பாராட்டு முதலமைச்சர் ஸ்பெஷல் பிரைஸ் உண்டு! சிறப்பு பரிசு உண்டு!
கலிய மங்கலம் ஊராட்சி மாடு !மாடு பிடிபட்டது 23 பரிசு வாங்கிக்கப்பா!
மதுரை மாவட்டம் வீரபாகு மாடு...... மாடு வெற்றி பெற்றது
மதுரை மாவட்டம் ஏஆர் விக்னேஷ் மாடு! மாடு தப்பியது!
யாரும் நிக்க வைக்காதிங்க பா! ஒரு மாட்டுக்கு ஒருத்தருக்குத்தான் பரிசு வாங்கணும்
செங்குறிச்சி புகழ் மாடு! போன தடவை புகழ்பெற்ற போன மாடு !அருமையான மாடு !மாடு வெற்றி பெற்றது.
விடுயா....
திருப்பத்தூர் கார்த்தி மாடு.... மாடு பிடிபட்டது...
மதுரை மாவட்டம் குதிரை மூக்கு கண்ணன் மாடு...... மாட்ட வெளியே அனுப்பு....
மாடு விளையாண்டா extra prize உண்டு...
96 ஒரு மிக்ஸி வாங்கிக்க ஐயா.... அருமை...
96. நல்லா மாடு பிடிக்கிற.... வாழ்த்துக்கள்...
தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை ஜி ஆர் கார்த்திக் மாடு அருமையான மாடு பா.... மாடு வெற்றி பெற்றது..
அடுத்த பேட்ச் 6 பேரை தவிர வெளியே போங்க 41 உள்ள வாப்பா!
கொம்ப பிடிக்காத வாலைப் பிடிக்காத.....
184 சூப்பர் பிடிப்பா... அருமையான பிடிப்பா.... பரிசு வாங்கிக்க...
96 சூப்பர் பிடிப்பா.... மாடு பிடிபட்டது....
Yellow colour t-shirt volunteers 50meter தள்ளி நில்லு பா...
எல்லோ கலர் டி-சர்ட் பூரா... துணை முதலமைச்சர் வரார்... போயி receive பண்ணுங்கப்பா....
197 அருமையான பிடி.... மாடு பிடிப்பட்டது... பரிசு வாங்கிக்கப்பா...
வரும்.... ஆனா ....வராது....
ஒத்த ராசா பிள்ளைய ரொம்ப அழகா வளர்த்து இருக்காரு.....
19க்கு முதலமைச்சர் பிரைஸ் உண்டு.....
171 ......ஒன்னு ரெண்டு மூணு..... அருமையான பிடிப்பா.... பரிசு வாங்கிக் கப்பா.....
அழகுடா !ஒரு சீலிங் ஃபேன்னு....
செங்குறிச்சி ஒத்த கை பாலமுருகன் மாடு.... மாடு ஜெயிச்சிருச்சு....
மதுரை மேட்டுப்பட்டி பால்பாண்டி மாடு ....சைக்கிள் ......மாடு போயிருச்சு....
நல்லா புடி..... அருமையான புடி.....
கருப்பன் கோவக்காரனா.... குசும்புக்காரனா.... ஆஹா..... அருமையான புடிப்பா....
கார் இருக்கு.... பைக் இருக்கு .... மிக்ஸி இருக்கு .....சீர்வரிசை அத்தனையும் இருக்குப்பா.....
2பேர் பிடிச்சா..... பொங்கல் வாழ்த்துக்கள்( பரிசு இல்லைங்கிறதை இப்படி நாசுக்கா சொல்கிறார்)
அடடா அருமையான பிடிப்பா.....இவருக்கு என்ன வேணுமோ குடுங்க.....
வீர தமிழச்சி மாடு..... பரிசு பெற்றது.....
இன்று மாலை 3 மணி அளவிலேயே கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டது.... 1353 மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன....
இறுதி விழாவில் துணை சபாநாயகர் தம்பிதுரை கலந்து கொண்டார்.....
இன்று இருபத்தோரு மாடுகளை பிடித்த திருச்சி முருகானந்தம் முதல் பரிசு கார் பெற்றார்!
16 மாடுகளை அடக்கிய கார்த்தி இரண்டாம் பரிசு பெற்றார்!
தமிழரின் வீர விளையாட்டு இனிதே முடிவுற்றது! அது என்றும் தொடரும்.....
அடுத்த தகவல்களுடன் சந்திக்கும் வரை விடை பெறுவது உங்கள் white rose Emperor முத்துகிருஷ்ணன்
No comments:
Post a Comment