பார்வையாளர்கள் அனைவருக்கும் white rose Emperror ன் வணக்கம்.
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது.
அறிவுத்திருக்கோயில் எனும் மனவளக்கலை மன்றம் எனும் மனக்கோயிலை திறந்து வைத்தவர்.
நெசவுத் தொழில் செய்யும் பெற்றோருக்கு எட்டாவது மகனாகப் பிறந்தார். மூன்றாவது வகுப்பு வரை மட்டுமே படித்து நெசவுத் தொழில் செய்து வந்தார்.
இவர் ஆயுர்வேத மருத்துவரான எஸ். கிருஷ்ணராவ் அவர்களை குருவாகக் கொண்டு தியானம், யோகா போன்றவற்றை கற்று அறிவு திருக்கோயிலை திறந்து நாடு முழுக்க குடும்பவியல், யோகா ,தியானம் பரவ பேருதவி செய்தார்.
என்ன உடலின் ஒவ்வொரு உறுப்பையும் இணைத்து பெருமைப்பட வைத்து உள்ளத்தில் நினைக்கும் போது அவை ஆரோக்கியமாக செயல்படும் என்பதை உலகுக்கும் நிரூபித்தார்.
அவர் உறவுகள் மேம்பட... மேலும் குடும்பத்திலும் சரி அலுவலகத்திலும் சரி மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும் அது மேலும் பெரிதாகாமல் இருக்க எடுத்துரைத்தார்.
அதனை நாம் கடைப்பிடித்தால் நிம்மதி நம்மை விட்டு விலகாது.
சரி அதனை பார்ப்போம்.
1. நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்:-
குடும்பத்திலும் கணவன் மனைவி இருவரில் யார் பெரியவர் என்ற எண்ணத்தை விட்டு விட்டால் எல்லோரும் ஒரு நல் வரமே!
2. அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேசிக்கொண்டே இருப்பதை விடுங்கள்:-
இந்த loose talks பேச்சு பக்கத்து வீட்டில் வசிப்பவர்ளிடமும் ,அலுவலகத்திலும் பிறரை'சுருக்'என்று சொல்லும்போது அது அவர்களுடைய மனதில் பஞ்சத்தை வளர்க்கும்.
3. எந்த விஷயத்தையும் பிரச்சினையையும் ,நாசுக்காகக் கையாளுங்கள் ,விட்டுக் கொடுங்கள்:-
உறவினர்கள் இடையே கூட சொத்து பிரச்சனை, குடும்ப பிரச்சனை யில் 'வெட்டு ஒன்று துண்டு இரண்டு'என பேசாமல் இருதரப்பினரும் உட்கார்ந்து பேசினால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தால் சில நாட்களில் அந்த பிரச்சினை தீரும்.
அரையடி வரப்புக்காக எவ்வளவு அண்ணன் தம்பிகள் பத்து வருடம் நீதிமன்றத்தில் அலைந்து வரப்போகும் நிலவும் போனதுதான் மிச்சம் என்ற கதையை கேள்விப்பட்டிருப்பீர்கள்...
4. சில நேரங்களில் சில சங்கடங்களை சந்திக்க வேண்டு:-
இது விட்டுக்கொடுத்துப் போவது, அதிகாரிகள் கோபப்படும் போது சிறிது விட்டுக் கொடுத்து பணிந்து போவது நலம் தரும்.
5. உண்மை எது.. பொய்யென விசாரிக்காமல்.. அங்கே இங்கே கேட்டதை சொல்வதை விடுங்கள்:-
இது கோள் மூட்டுதல் போன்ற கெட்ட பழக்கத்தை ஒழிக்கும். எதையும் ஆதாரம் கொண்டு முடிவு எடுக்க வேண்டும்.
6. அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்:-
இது புத்தர் போன்ற மகான்கள் காலத்திலிருந்து நமக்கு சொல்லி வருகின்றனர். எந்த ஆசைக்கும் ஒரு எல்லை நாம ஏற்படுத்தினால் குடும்பத்தில் நிம்மதி நிலவும்.
7. அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தாதீர்கள்:-
அவன், அவள் இப்படி சொல்லிவிட்டாரே என்று சின்ன மனஸ்தாபங்களை மனதில் வைத்திருக்காதீர்கள். பேசித் தீர்த்து விடுங்கள்.
8. உங்கள் கருத்துக்களில் உடும்பு பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்:-
நான் சொல்வதுதான் சரி என முடிவெடுக்காதீர்கள். உங்களுக்கு சரி எனப்படுவது அடுத்தவர்களின் பார்வையில் அது தவறாக படலாம். எனவே சீர்தூக்கிப் பார்ப்பது நல்லது.
9. மற்றவர்களுக்குரிய மரியாதையை காட்டவும் இனிய இதமான சொற்களை பயன்படுத்த தவறாதீர்கள்:-
அவர் மரியாதை தரவில்லை அதனால் நான் தரவில்லை என்ற நினைப்பை ஒழியுங்கள். முதலில் நாம் மரியாதை கொடுக்கும் போது எதிர்தரப்பில் இருந்து உங்களுக்கு மரியாதை தானே தேடிவரும்.
10. அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்:-
பிரச்சினை ஏற்படும்போது, போனில், கடிதத்தில் காட்டமாக செயல்படாதீர்கள். நேருக்குநேர் பேசுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் எப்பொழுதும் கெட்டுப்போவதில்லை.
இவைகள் சில துளிகள் தான்.... அவரின் கடல் போன்ற அறிவுரைகளை அவர் ஏற்படுத்திய அறிவுத் திருக்கோயிலுக்கு சென்று அனுபவித்து அனுபவித்து பாருங்களேன்.
அடுத்த தகவல்கள் சந்திக்கும் வரை white rose Emperor முத்துகிருஷ்ணன்.
No comments:
Post a Comment