Saturday, February 2, 2019

அரசு ஊழியர்களுக்கு பிரதமர் மோடியின் சந்தோஷமான பட்ஜெட்


         பார்வையாளர்கள் அனைவருக்கும் white rose Emperor வணக்கம்.
          நேற்று நாடாளுமன்றத்தில் நிதி இலாகா பொறுப்பை கவனிக்கும் ரயில்வே மந்திரி பியூஷ் கோயல் 2019-2020  ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை அறிவித்தார்.

             இது பல சந்தோஷமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
          அதில் ஒன்று....
          அரசு ஊழியர்களின் வருமான வரி விலக்கு உச்சவரம்பு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.
           அதன்படி இதுவரை தனிநபர் வருமான வரிவிலக்கு இரண்டரை லட்சத்தில் இருந்து 5 லட்சமாக லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

            இதனால் நடுத்தர சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் பல லட்சம் பேர் வரி செலுத்துவதிலிருந்து விடுபட்டனர்.
              ஏனென்றால் குறைந்தபட்ச சம்பளமாக 30,000 அளவுக்கு சம்பளம் வாங்குபவர்கள் குறைந்தபட்சமாக  வருமான வரி செலுத்த வேண்டி வந்தது.
            இதனால் அவர்கள் மகிழ்ச்சியில் இல்லை. ஏனெனில், அந்த நடுத்தர சம்பளம் பெறும் அரசு ஊழியர்களில் பெரும்பாலானோர் வாடகை வீட்டில் தான் குடியிருக்கின்றனர்.
          அவர்கள் வாடகை கட்டி, குழந்தைகளுக்கு பள்ளி கல்லூரி கட்டணம் செலுத்தி, குடும்ப மருத்துவ செலவுகள் மற்றும் குடும்ப செலவுகள் போக மாதக்கடைசியில் கையை பிசைந்து கொண்டு இருப்பவர்கள்.
         அவர்கள் வருஷக் கடைசியில் வருமான வரி செலுத்த மிக்க கஷ்டப்படுவது தொடர்ந்து வந்தது.
          அவர்களுக்கு வருமான வரி விலக்கு உச்சவரம்பு 5 லட்சம் என்பது சந்தோசமான பட்ஜெட்டாக அமைந்தது.
            இதைத்தான் பல ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த பட்ஜெட்டின்  பிரதமர் மோடி அவர்களின் பாராட்டைப் பெற்று விட்டார்.
           பணமதிப்பிழப்பு,GST குறித்து பல விமர்சனங்கள் எழுந்தாலும் இந்த பட்ஜெட்டில் 5 லட்சம் என்ற அறிவிப்பு மிக்க பாராட்டைப் பெற்றது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
        மேலும், நிலையான கழிவு 40 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
         இதனால் 3 கோடி மாதச் சம்பளதாரர்கள் ஓய்வூதியர்கள் பலனடைகிறார்கள்.
        வங்கி டெபாசிட் வட்டி ,அஞ்சலக டெபாசிட் வட்டி மூலம் வருகிற வட்டி கழிவு ரூ 10 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரமாக உயர்கிறது.
          இனி இரண்டு வீடுகளுக்கு வீட்டுக்கடன் வட்டி சலுகை வழங்கப்படும். (இரண்டு வீடு என்பது அவர் கட்டுகிற வீடு..... வேற வீடு என்று நினைச்சுக்காதீங்க.... சும்மா தமாஷ் தாங்க...)
       சரி மற்றவர்களுக்கு....
       வீட்டு வாடகை கழிவுக்கான உச்சவரம்பு ஒரு லட்சத்து 50 ஆயிரத்திலிருந்து 2 லட்சம் 40 ஆயிரமாக இருக்கிறது. இது வாடகை வருமானம் பெறுபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி.
           மீனவர்களுக்கு என ஒரு தனி இலாகா ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் மீனவர்களின்பிரச்சினைகள், நலத்திட்டங்களுக்கு உதவும். இப்பொழுதாவது தமிழக மீனவர்களின் கடல்கடந்த மீன்பிடி பிரச்சனை தீருமோ என்ற ஆவலில் உள்ளனர்.
            அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அவர்கள் மாதம் ரூ 3000 ஓய்வு ஊதியம் பெறுவார்கள். 
          கல்வித் துறைக்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன....
           விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ 6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.... இது சற்று இன்னும் அதிகப்படுத்தி இருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
           பணிக்கொடை வரம்பு ரூ 10 லட்சத்தில் இருந்து30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
           ராணுவத்துக்கு 3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர்க்க முடியாதது..... நம்மைவிட நம் நாட்டின் பாதுகாப்பு முக்கியம்.

          மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு ரூ 60,00 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தமிழக 100 நாள் திட்ட வேலைவாய்ப்புக்கு மிக்க உதவியாக இருக்கும்...
        சினிமா துறையிலும் படப்பிடிப்பின்போது ஒற்றைச் சாளர முறை அனுமதி வழங்கப்படும். திருட்டுத்தனமாக சினிமா படங்களை வெளியிடுவதை தடுக்க சட்டத்திருத்தம் கொண்டு வரப்படுகிறது.
        ஏற்கனவே பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. அதனால் கல்வி நிறுவனங்களில் 25 சதவீத கூடுதல் இடங்கள் ஏற்படுத்தப்படும்.
          இது மாணவர்களுக்கு நல்ல விஷயம்.
           ரயில்வே கட்டண உயர்வு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.. அப்பாடா ரயில் கட்டண உயர்வில் இருந்து தப்பித்தோம்...

           இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும்... இதனை நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
           எங்களது வீடியோக்களை white rose trends Tamil channelல் தொடர்ந்து பாருங்கள்.
            நன்றியுடன் white rose Emperor முத்துகிருஷ்ணன்.
Amazon low price watches ever
Click the picture below to shop👍👍👍


No comments:

Post a Comment