Thursday, February 14, 2019

மாற்றங்கள் என்பது தவிர்க்க இயலாததே !


       அன்புள்ள பார்வையாளர்கள் அனைவருக்கும்  white rose emperrotன் வணக்கம்.
        மாற்றங்கள்மனித
வாழ்க்கையில் தவிர்க்க இயலாத ஒன்றே.
         ஆதி மனிதனாக தழை இலை உடுத்தி வாழ்ந்தவர்கள்தான் நாம்.
       இன்றைய கம்யூட்டர் யுகத்தை அடைய பல ஆயிரம் ஆண்டுகளை கடந்து வந்துள்ளோம்.
      பழைய கற்காலம் கடந்து புதிய கற்காலத்தை கடந்து,  பல உலோக காலத்தை கடந்து வந்துள்ளோம்.
       நம் மூதாதையர்கள்வெறும் வேட்டி துண்டை உடுத்தித்தான் வாழ்ந்து முடித்துள்ளனர்.
       ராஜ,ஜமீன்தார் வாழ்க்கை மட்டும்தான் சுகவாழ்க்கையாக. இருந்திருக்கலாம்.
        நம் முன்னோர்கள் நமது வாழ்க்கை முறையை 50 மைல் சுற்றளவில் தான் அமைத்து வாழ்ந்து வந்தனர்.
    தமது விளைபொருட்களை பக்கத்து ஊர் சந்தையில் பண்டமாற்று முறைதான் பண்ட பயன்படுத்தி விற்று வந்தனர்.
       தலைச்சுமையாக தான் தனது பொருட்களைத் தூக்கிச் சென்று வந்தனர்.
         வசதி படைத்தவர்கள் தான் மாட்டு வண்டியை பயன்படுத்தினர். இப்பொழுது கார் வைத்திருப்பது போல.

        பெண் எடுப்பதும் பெண் கொடுப்பதும் சில மைல் அளவிலேயே நடந்து வந்தது.
        கோயில் குளங்களுக்குச் சென்று வருவது நடைபயணமாகவே  சென்று விடுவது வழக்கமாக இருக்கிறது.
       வீட்டில் சொத்துக்களாக ஆடு மாடுகளை தான் வைத்துள்ளனர்.
       வீட்டில் உள்ள பசு மாடுகளை வைத்து தான் அவர்களது வசதி வாய்ப்பு உறுதி செய்யப்பட்டது.
       வீட்டின் தேவையான பொருட்களும் மிக குறைவாகவே இருந்தது.
        இரவு 6 மணி ஆகி விட்டாலே அன்றைய பொழுது
முடிந்ததாக உறங்கச் சென்று விடுவர் . பொழுதுபோக்குகள் இல்லை அதனால குழந்தைகளும் பத்து பதினைந்து பேர் குழந்தைகளாக பெற்று இருந்தனர்.
        கல்வியறிவு குறைவாக இருந்தது. தொடர்புக்கு விழிப்புணர்வு இல்லை.இதனால் வியாதிகள் அதிகமாகி காலரா போன்ற நோய்கள் பரவி பல லட்சக்கணக்கான பேர் இறந்துள்ளதாக வரலாறு கூறுகிறது.
        ஆனால் இன்று  அப்படி இல்லை. 
ராஜராஜ சோழனும் ராஜேந்திர சோழனும் டிவி ,ஃபேன், பைக்குகள் ,கார்கள் பார்க்கவில்லை .
        மாடு கட்டி ஏறு பூட்டி உழுத நாம் இன்று டிராக்டர் வைத்து நிலத்தை உழுகிறோம். அன்று இயந்திரம் மற்றும் இயந்திரஅறுவடை செய்கிறோம் களை எடுக்க இயந்திரம் பயன்படுத்துகிறோம்.
           மாட்டு வண்டி பூட்டி விவசாய பொருட்களை எடுத்துச் செல்கிறோம்டிராக்டரில் பொருட்களை எடுத்து காலை மாலை இரண்டு வேளையும் டிராக்டர் மூலம் எடுத்துச் செல்கிறோம்.
      பாத்தி கட்டி தண்ணீர் பாய்ச்சுவது போய் இப்பொழுது சொட்டுநீர் பாசனம் வந்துவிட்டது.
        வேட்டி போய் ஜுன்ஸ் வந்து மடிசாரும்  போய் சுடிதாரும் வந்து விட்டது .
       மருமகளை சுடிதார் போடாதே என்று சொன்ன மாமியார்கள் தான், தனது பேத்திகள் லெக்கின்ஸ் போட்டு சுற்றுவதை பார்த்து பேசாமல் பார்த்து ரசிக்கிறார்கள். காலம் மாறிவிட்டது .
        இன்றைய பெண்கள் அலுவலகத்திற்கு காரிலேயே போய் மாலை காரிலேயே திரும்பி வருகிறார்கள்.

          நூறு வருடம் முன்பு வயல்களையும் நிலங்களையும் அழித்து தானே சாலைகளும் ரோடுகளும் தொழிற்சாலைகளில் அமைத்தார்கள்.
        இன்றைய தமிழகம் நூறு வருடம் முன்பு இப்படியா இருந்தது. சிலவற்றில் இழந்துதானே பலவற்றை நாம் வசதியாக பெற்றுள்ளோம்.
       இன்றைய விமான நிலையங்கள் பஸ் நிலையங்களும் இதற்கு முன்பு வயல் நிலங்களாக அமைந்திருக்கும்?
         அப்பொழுது இருந்தவர்கள் இதெல்லாம் வேண்டாம் என்று நினைத்திருந்தால் நாம் இப்படியாக வாழ்ந்திருப்போம்?
        அரசு பள்ளிகள் அமைப்பதற்கு பல ஏக்கர் நிலம் இன்று எப்படி வந்திருக்கும்?

        ஊர் பெரியவர்கள் தங்கள் ஊர் குழந்தைகள் கல்வி அறிவு தான் முக்கியமாக நினைத்தார்களே தவிர தங்கள் நிலத்தை இல்லை. அவர்கள் விட்டுக் கொடுத்தார்கள் நாம் அனுபவிக்கிறோம். கல்வி பெற்று பாஸ்போர்ட் பெற்று வெளிநாட்டில் பணியாற்றி வெற்றியோடு சம்பாதித்து ஊரில் வசதியாக வாழ்கிறோமே?
        அன்றைய மக்கள் நம்மை நினைத்து போராடி உயிர் விட்டதால் தானே நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறோம்.
       அவர்கள் அன்று இன்று நினைப்பது போல அவர்கள் நினைக்கவில்லையே?
       சில நல்ல விஷயங்களுக்காக விட்டுக்கொடுத்து அரசிடமிருந்து இதைவிட அதிகமாக இழப்பீடு கேட்டுப்பெறலாம் அவர்களும் காலத்திற்கேற்ப சிறிது வளைந்து கொடுத்து இழப்பீடு அதிகமாக வழங்கினால் போராட்டம் என்பது இல்லாமல் அரசு திட்டங்களை சமாளித்துவிடலாம்.
        நல்ல திட்டங்களை வரவேற்று சிலவற்றை விட்டுக் கொடுத்துதான்ஆக வேண்டும். சரியில்லாதது என நினைப்பதை வேண்டுமானால் அரசுக்கு எடுத்துரைக்கலாம் என்பதே சரியானதாக இருக்கும் பெரும்பாலும் பொதுமக்களின் தாழ்மையான கருத்து.
        மற்ற சில வளர்ச்சி அடையாதமாநிலங்களை ஒப்பிடும் போது  தமிழகம் குறைந்தது 50 வருடங்கள் முன்னோக்கி வளர்ச்சியில் தான் உள்ளோம் என்பது அனைவருக்கும் தெரியும்.
       எப்பொழுதுமே விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை.

      இந்த விஷயம் உங்களுக்கு பிடித்திருக்கும்.இதனை உங்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். நன்றி.
   
   

 
     
     

     
       







     
     
   

     

No comments:

Post a Comment